IBC Tamil
உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் வெறுப்பு பேச்சுக்கள் குறித்து ஆராய்ந்து, அவரை கைது செய்து ஏற்படவிருக்கும் வன்முறைகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவில் செயற்பாட்டாளரான உபாலி ரத்நாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார். அநுராதபுரம் புனித நகரில் இந்துக் கோயில்களை அமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக போலியான கருத்துக்களை குறிப்பிட்டு உதய கம்மன்பில மத முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். உதய கம்மன்பில குறிப்பிட்ட கருத்துக்க...