Polimer News
நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை..!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையொட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். சென்னை நந்தனத்தில் உள்ள தேவரின் முழு உயர சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை அளித்தார். இதனைத் தொடர்ந்து சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து அமைச்சர்களும் மரியாதை அளித்தனர். முதலமைச்சரை காண நந்தனம் பகுதியில் காலையிலேயே மக்கள் பலர் கூடிய நிலையில், சாலையோரம் திரண்டு நின்றவர்களை சந்தித்த மக்கள் அவர்களை நோக்கி கையசைத்தபடி நடந்து சென்றார். இதனிடையே சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள…