'எட்டப்பன் வேடம் இன்று கலைந்தது': கட்டபொம்மன் சினிமா பட வீடியோவை பகிர்ந்து மாணிக்கம் தாகூர் பதிவு
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை நடைபெறவுள்ளது. இதில், தொகுதி மறுவரையறைக்கான அரசியல் சாசன திருத்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த மசோதா நிறைவேறுவதற்கு 3-ல் 2 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த ஆதரவு கிடைக்காததால் கடந்த ஏப்ரல் மாதம் இந்த மசோதா தோல்வி அடைந்திருந்தது. தற்போது மீண்டும் அந்த மசோதா கொண்டு வரப்படும் நிலையில், இந்த முறையும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை பா.ஜ.க எட்டுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க ஆதரவு இத்தகைய சூழலில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிக…