Nakkheeran
“சப்பாத்தி தான்.. உடல் எடை குறைந்துவிட்டது...” - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் தரப்பு வாதம்!
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவில் பண மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பாக அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சத்யமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை புழல் மத்தியச…