தொழில்நுட்பமும் இயற்கையும் இணையும் கோவை வீடு!
கோயம்புத்தூர் பேரூருக்கு அருகிலுள்ள பச்சாபாளையத்தில், 7 சென்ட் நிலத்தில் நான்கு படுக்கையறைகள், ஹோம் தியேட்டர், நீச்சல் குளம், மாடித் தோட்டம் ஆகியவற்றுடன் இந்த வீடு அமைந்துள்ளது. ‘Space Language Architects’ நிறுவனத்தின் வடிவமைப்பாளர் தினேஷ் பெருமாள் இதை வடிவமைத்தார். வீட்டில் வசிப்போரின் விருப்பங்களையும் வாழ்க்கைமுறையையும் புரிந்துகொண்டு, ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்துவமான கான்செப்டை உருவாக்குவதே அவரது அணுகுமுறை. தண்ணீர், மின்சாரம்…