றீ(ச்)ஷா வளாகத்திற்கு வருகை தந்த பிரித்தானிய பல்கலைக்கழக பேராசிரியர்!
பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் (University of Leicester) தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் சேர் நிசான் கனகராஜா (Professor Sir Nishan Canagarajah), றீ(ச்)ஷா வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். பிரித்தானிய பல்கலைக்கழகமொன்றின் துணைவேந்தர் பதவியை வகிக்கும் முதலாவது தமிழர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார். அத்தோடு உயர்கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளுக்கு ஆற்றிய மகத்தான சேவைகளுக்காகப் பிரித்தானிய மன்னரால் மிக உயரிய சேர் (Knight Bachelor) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர...