Daily Thanthi
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மரியாதை!
சென்னை, விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் விழாவும், 64-வது குருபூஜையும் இன்று நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாலை அணிவித்து மரியாதை இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;- தேவர் திருமகனின் திருவுருவச் சிலைக்குத் திருமாலை சூட்டினேன். அவர் வணங்கப்படுவதற்குப் பல…