Indian Express Tamil
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: சீமானுக்கு தி.மு.க ஆதரவு அளிக்குமா? ஸ்டாலினின் யோசிக்க வைக்கும் பதில்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்ததோடு தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் தன்னை பொது வேட்பாளராகக் கருதி ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு தி.மு.க ஆதரவு அளிக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொடுத்த பதில் அரசியல் நோக்கர்கள் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, த.வெ.க ஆட்சி அமைத்த நிலையில், அ.தி.மு.க-வில் இருந்து மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆ…