Nakkheeran
'2 பில்லியன் டாலர் ராணுவ சாம்ராஜ்யம்'- ஈரானின் ரகசிய நெட்வொர்க்கை அம்பலப்படுத்திய 11 இலக்க ரகசியம் ?
அமெரிக்காவின் கடுமையான கடற்படை முற்றுகை மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளையும் தவிடுபொடியாக்கி, ஈரான் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான அசுரத்தனமான ரகசிய ராணுவ விநியோக நெட்வொர்க் ஒன்றை உருவாக்கி இயக்கி வருவது தற்பொழுது அம்பலமாகியுள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஈரான் சட்டவிரோத இறக்குமதியைச் செய்து வருகிறது. குறிப்பாக பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுடன் தொடங்கிய மிகக் கடுமையான போருக்கு மத்தியிலும், ஈரான் எவ்வாறு ஆயிரக்கணக்கான ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் தொடர்ந்து தயாரித்து விநியோகம் செய்கிறது என்ற உலக நாடுகளின் பெரும் கேள்விக்கு விடை கிடை கிடைத்துள…