Vikatan
அரியலூர்: நள்ளிரவில் மது அருந்திய போதை ஆசாமிகள் - எச்சரித்த போலீஸாரை கடுமையாக தாக்கியதால் அதிர்ச்சி!
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிகின்றனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதே போல் நேற்று இரவும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தளவாய் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் சிமென்ட் ஆலை உள்ளது. அந்த ஆலைக்கு அருகே இருக்கும் லாரி செட் முன்பு அமர்ந்து மூன்று பேர் மது குடித்துள்ளனர்…