உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“பட்டியலினச் சகோதரர்களையும் தன் உடன்பிறப்பாய் நேசித்தவர்” - வைரமுத்து புகழஞ்சலி!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்த நாள் விழா மற்றும் 64வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30-10-26) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி முதல்வர் விஜய் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று அங்கிருக்கும் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேவர் திருமகனின் திருவுருவச் சிலைக்குத் திருமாலை சூட்டினேன். அவர் வணங்கப்படுவதற்…