Indian Express Tamil
ஸ்டிக்கரைப் பிரிச்சும் அந்த பிசுபிசுப்பு போகலையா? தேங்காய் எண்ணெய் முதல் ஹேர் ட்ரையர் வரை... இந்த 5 ட்ரிக்ஸ் ட்ரை பண்ணுங்க
புதிதாகக் கடையில் இருந்து பாத்திரங்கள் வாங்கும்போது, அவற்றில் விலை விவரம், தயாரிப்பு நிறுவனம் மற்றும் பிராண்ட் பெயர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். பாத்திரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு இந்த ஸ்டிக்கர்களை அகற்றுவது வழக்கம். ஆனால், ஸ்டிக்கரை எளிதாகப் பிரித்துவிட்டாலும், அதன் பின்புறம் இருக்கும் பசை மட்டும் பாத்திரத்தின் மேற்பரப்பில் பிடிவாதமாக ஒட்டிக்கொண்டு விடும். குறிப்பாக, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், கண்ணாடி ஜாடிகள் மற்றும் உணவு சேமிக்கும் டப்பாக்களில் இந்தப் பிரச்சனையை அதிகமாகப் பார்க்க முடியும். தண்ணீரால் கழுவினாலும், சோப்பு போட்டுத் தேய்த்தாலும் சில நேர…