IBC Tamil
கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் உயிரிழப்பு!
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த கணவன் மனைவியான கொள்ளையர்கள் கொடுத்த மயக்க மருந்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்ட வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்லாற்றைச் சேர்ந்த 65 வயதுடைய கணபதிப்பிள்ளை விஜயலட்சுமி என்ற வயோதிப பெண்ணே நேற்று (29) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவருடைய உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த மார்ச் 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிகாடு வயல் பகுதியில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக் க...