உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'எல்லையில் வெடிக்கும் தண்ணீர் யுத்தம்';சீனாவுக்கு எதிராக இந்தியா எடுக்கும் விஸ்வரூபம்-எதிர்க்கும் 'ஆடி' மக்கள்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சனை தற்போது ஒரு புதிய வடிவை எட்டியுள்ளது. அதுதான் 'தண்ணீர் யுத்தம்'. திபெத் பகுதியில் உருவாகி இந்தியாவுக்குள் பாய்ந்து வரும் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் பகுதியில், சீனா அசுர வேகத்தில் ஒரு பிரம்மாண்ட அணையைக் கட்டி வருகிறது. சீனாவின் இந்த உத்தியானது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையையோ அல்லது திடீர் வெள்ளப் பெருக்கையோ ஏற்படுத்தக்கூடும் என்று புது தில்லி தீவிரமாகக் கவலை கொள்கிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், இந்தியாவின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்கவும், அருணாச்சல பிரதேச எல்லையில் பாயும் சியாங் ஆற்றின்…