Indian Express Tamil
வீட்டில் பட்டாசு வாங்கி வச்சிருக்கீங்களா? இந்த 3 இடங்களில் இருந்தால் உடனே மாத்திடுங்க
தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள் எனக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி எதிர்பார்ப்பது பட்டாசு வெடிப்பதைத்தான். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே விதவிதமான பட்டாசுகளை வாங்கி வீட்டில் சேமித்து வைப்பது வழக்கம். ஆனால், பட்டாசுகளை வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை அவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதிலும் காட்ட வேண்டியது அவசியம். ஏனெனில், முறையாகச் சேமிக்கப்படாத பட்டாசுகள் எதிர்பாராத நேரத்தில் தீ விபத்துகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக வீட்டில் சில இடங்களில் பட்டாசுகளை வைப்பது மிகவும் ஆபத்தானது. எனவே, தீப…