Indian Express Tamil
விஜய் பட பாடலை கச்சேரியில் பாடிய தேவா; கடைசி வரியை கேட்டு சண்டைக்கு வந்த மாமியார்: அப்படி எந்த பாட்டை பாடினார்?
தமிழ் திரையுகில் தேனிசை தென்றல் என்று அழைக்கப்பட்ட தேவா இன்று நம்முடன் இல்லை என்றாலும், அவரது நேர்காணல்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், அவர் பாடிய ஒரு பாடலால், அவரது மனைவியும் மாமியாரும் சண்டை போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 1986-ம் ஆண்டு வெளியான மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தேவா. அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த இவர் தேனிசை தென்றல் என்று அழைக்கப்பட்டார். பாடல்கள் மட்டும் இல்லாமல் எல்லோரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்ட தேவா, 1992…