IBC Tamil
மன்னாரில் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு எதிராக முறைப்பாடு
மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, குறித்த உணவகத்தில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவுகள் சுகாதாரமற்ற முறையில் கையாளப்பட்டமை, உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை, அதிகளவான ஈக்கள் காணப்பட்டமை, உணவைக் கையாளும் பணியாளர்கள் கையுறைகள் மற்றும...