Nakkheeran
பள்ளி சிறுமியின் வாழ்த்து; நெகிழ்ந்து போன ராகவா லாரன்ஸ்
நடன அமைப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா 4 படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் பென்ஸ், மஹாவீர் கர்ணா, புல்லட் உள்ளிட்ட இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே சினிமாவைத் தாண்டி ஏழை எளிய மக்களுக்கு தனது அறக்கட்டளையின் மூலம் நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி ரசிகர்கள், திரை பிரபலங்கள் மற்றும அவரது உதவியால் பயன்பெறுவோர் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் பள்ளிச் சிறுமி ஒன்று இன்ஸ்டாகிராம் வாயிலாக பாட்டுப் பாடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தது. அ…