உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஏஐ-இடம் கேட்கவே கூடாத அந்த கேள்வி; பறிபோன பெண்ணின் உ@யிர்- சாட்ஜிபிடி மீது கொ@லை வழக்குபதிவு

எந்தவொரு சந்தேகமாக இருந்தாலும், உடனே செயற்கை நுண்ணறிவு செயலிகளை நாடிப் பதில் தேடுவது பலருக்கும் அனிச்சை செயல்போலவே ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தின் மீது வைக்கப்படும் கண்மூடித்தனமான நம்பிக்கை ஒரு மனிதரின் உயிரையே பறிக்கும் அளவிற்கு எவ்வளவு பெரிய கொடூரமான விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு அமெரிக்காவில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம் சாட்சியாக மாறியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 31 வயதான போவான் வான் என்ற இளம் பெண், அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் உள்ள முன்னணி அமேசான் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். சிறுவயதிலிருந்தே கடுமையான வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந…