உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு தரம் இல்லாத பலகாரமா? இந்த நம்பருக்கு உடனே புகார் கொடுங்க

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் தயாரிப்பு, விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ். மாலதி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு, கார வகைகள் மற்றும் இதர உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, பொதுமக்கள் கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களுக்கு முறையான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபடும்…