Indian Express Tamil
கோவில் நிலத்தில் பெரியார் சிலை: 4 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிலையை சேதப்படுத்தாமல் பாதுகாப்பாக அகற்றி, வேறு பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக நான்கு வார கால அவகாசம் வழங்கி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவையாறு அருகே கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் பெரியார் சிலை அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. கோயி…