Nakkheeran
ஐடி வேலைகளுக்கும் வெடி-கோடிங்கை விட்டுவிட்டு செல்லத் துடிக்கும் மென்பொறியாளர்கள்
செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி, உலக அளவில் பெரும் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. மனித மூளையால் சிந்தித்துச் செய்யப்பட வேண்டிய பல நுணுக்கமான வேலைகளை இன்று கணினி நொடிப் பொழுதில் செய்து முடிக்கிறது. இந்த அசுர வேகம் ஒருபுறம் வியப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் மனிதனின் வாழ்வாதாரமாக விளங்கிய தொழில்நுட்ப வேலைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மென்பொருள் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் கூட தங்களின் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்துப் பெரும் கவலையடைந்து, மாற்றுத் தொழில்களை நாடத் தொடங்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்ப…