Nakkheeran
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள்: “ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழு” - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், கோயில் நிர்வாகம் முறையாகச் செயல்படவில்லை என்றும் வேதனை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் இதற்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இதனை எதிர்த்து கோயில் பொது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, கடந்த 12 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தைப் பொது தீட்சிதர்களே கவனித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக கோயிலின் வரவ…