Nakkheeran
மகேஷை அடுத்து நேரு? - திருச்சி கிழக்கு தேர்தல் டார்கெட்!
"தன்னை எதிர்த்து யாரும் விமர்சிக்கக் கூடாது' என்பதில் தெளிவாக இருப்பார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மீறினால் கைது தான்! அந்த வழியைப் பின்பற்றி அன்பில் மகேஷ் கைது மூலம் பழிவாங்கும் அரசியலைத் தொடங்கியிருக்கிறார் விஜய். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, டி.டி.சி.பி. மற்றும் சி.எம்.டி.ஏ. அனுமதிகளை வாங்கித்தருவதாகச் சொல்லி பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இந்தப் பணம் "பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் சேகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் செயலாளர் இளங்கோவன் புகாரளித்த நிலையி…