Nakkheeran
அரசியலை வீழ்த்திய அந்தரங்கம்-நந்தன் மாசிலாமணி (6)
ரஷ்ய உளவாளி சர்ச்சையை கிளப்பிய எலன் ரோமெட்ச்! மர்லின் மன்றோ போன்றவர்களின் ரகசியக்காதல் விவகாரம், வெறும் திருமண உறவுக்கு வெளியிலான காதல் சர்ச்சையாக இருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடிக்கும், ஜெர்மன் மாடல் அழகி எலன் ரோமெட்ச் (ஊப்ப்ங்ய் தர்ம்ங்ற்ள்ஸ்ரீட்)க்கும் இடையிலான ரகசியக்காதல் விவகாரம், பனிப்போர் உச்சத்தில் இருந்த காலச்சூழலில் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பையே உலுக்கியெடுத்தது. கென்னடியின் அரசியல் வாழ்வையே முடிவுக்குக் கொண்டுவரும் அளவுக்கு ஆபத்தானதாக இருந்தது. எலன் ரோமெட்ச் ஜெர்மனியில் பிறந்த ஒரு கவர்ச்சியான மாடல். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இவரது குடும்பம் கம்யூனிச கி…