IBC Tamil
அமைச்சர் சுனில் செனவிக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக அமைச்சு தெரிவிப்பு
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில், சமூக ஊடகங்களில் பொய்யான மற்றும் புனையப்பட்ட தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமைச்சரின் ஊடகச் செயலாளர் குணரத்ன விக்கிரமதிலக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அடையாளம் காணப்பட்ட சமூக ஊடகச் செயற்பாட்டாளர் ஒருவரால் இந்தப் போல...