Daily Thanthi
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்; மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
த.வெ.க. ஆட்சி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான 'தமிழக வெற்றிக் கழகம்' 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை எட்ட, தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க. அரசு அமைந்தது…