Daily Thanthi
6 நாட்களுக்குப் பிறகு மீண்டும் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
தூத்துக்குடி, புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 6 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், 6 நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை மீண்டும் கடலுக்குச் சென்றனர். தமிழக கடலோரப் பகுதிகளில் புயல் மற்றும் மோசமான வானிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடந்த 6 நாட்களாக…