Hindu Tamil Thisai
திருவள்ளூர் | சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஜார்க்கண்ட் இளைஞர் கைது
திருவள்ளூர்: சென்னை அருகே சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தினமும் வீட்டருகே உள்ள மசூதிக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சிறுமி மசூதிக்கு சென்றபோது மசூதி வாசலில் அமர்ந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சிறுமி கூச்சலிட்டதை அடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த இளைஞரைப் பிடித்து புதூர் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்…