Indian Express Tamil
திருவாரூர் - காரைக்குடி தடம் மின்மயமாக்கல்: தாம்பரம் - ராமேஸ்வரம் ரயில்கள் இனி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அப்பாதையில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை உயர்த்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட மொத்தம் 8 ரயில் சேவைகள் வரும் 2027 ஜனவரி 1 முதல் அதிவிரைவு (Superfast Express) ரயில்களாக தரம் உயர்த்தப்படுகின்றன. திருவாரூர் - காரைக்குடி தடம் மின்மயமாக்கப்பட்ட பிறகு, அதிவிரைவு ரயிலாக மாற்றப்படும் முதல் சேவை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் எண் மாற்றங்களின் விவரம்: சென்னை எழும்பூர…