உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சிறை கதவருகே போலீசாரை ஏமாற்றி தப்பிய கைதி: கடுமையான நடவடிக்கை வேண்டும் - அன்புமணி கண்டனம்

கோவை மத்திய சிறை நுழைவுவாயிலில் நீதிமன்றக் காவலில் வைப்பதற்காக அழைத்து வரப்பட்ட வழிப்பறி வழக்கு கைதி ஒருவர், காவல்துறையினரின் பிடியில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற வழிப்பறி வழக்கு தொடர்பாக ராகவன் என்பவரை அன்னூர் போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, ராகவனை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் அவரை வாகனத்தில் அழைத்துக்கொண்டு போலீசார் கோவை மத்திய சிறைக்கு வந்தனர். சிறையின் நுழ…