உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது GSLV F-18 ராக்கெட்..!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03'ஐ சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட், விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து திட்டமிட்டபடி இரவு 11.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. 2,250 கிலோ எடை கொண்ட வழிகாட்டுதல் செயற்கைக்கோளான என்விஎஸ்-03, நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். சுமார் 50 மீட்டர் உயரமும், 420 டன் எடையும் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் 20வது வர…