Nakkheeran
”எல்லையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை”; 12 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
இமயமலையில் உள்ள பனிப்பாறை உடைந்ததால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்குப் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். பூடானின், காசா மாவட்டத்தில் ஷின்டாபு என்ற பனி ஏரி அமைந்துள்ளது. இமயமலை பகுதியில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள ஏரிகளில், இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், இந்த ஏரி கடந்த வியாழக்கிழமை (29-10-26) அன்று மாலை திடீரென உடைந்தது. அதனால், இந்த ஏரியிலிருந்து வெளியேறிய பல மில்லியன் கன மீட்டர் நீர் ’மோ சூ’ ஆற்றுக்குள் பாய்ந்தது. திடீரென அதிகளவிலான நீருடன், சகதியும் கலந்து வந்த வெள்ளத்தால், மேற்குவங்கத்தின் எல்லையோர மாவட்டத்தில…