Nakkheeran
‘வேட்டுவம்’ பட ரிலீஸில் மாற்றம்; பண்டிகையை குறிவைத்த பா.ரஞ்சித்!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் படம் ‘வேட்டுவம்’. இப்படத்தை அவரது நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் தயாரிக்கிறது. இப்படத்தில் ஆர்யா, வி ஆர் தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. அப்போது கடந்த ஆண்டு ஜூலையில் விழுந்தம்பாடி கிராமத்தில் நடந்த படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் எஸ். மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்…