Indian Express Tamil
மீனாட்சி அம்மன் கோவிலில் மின்வெட்டு; கோவை சிறையில் கைதி ஓட்டம்: அமைச்சர் நிர்மல் குமாரை மீண்டும் ரவுண்டு கட்டும் தலைவர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, ஆட்சியைப் பிடித்த 6 மாதங்களிலே கடும் விமர்சங்களை எதிர்கொண்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக நிகழும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் ஓய்வதற்குள் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் இந்தியா முழுக்க பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. சர்வதேச ஊடங்கள் கூட இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே, சென்னை புழல் சிறையில் இருந்து நேபாளத்தை நேபாள நாட்டைச் சேர்ந்த விசாரணை கைதி சுதீப் போகதி தப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இன்று (அக்.31) கூட கோவை…