Indian Express Tamil
டோல்கேட்களில் அமலுக்கு வந்த வருடாந்திர உள்ளூர் அனுமதிச் சீட்டு: பயணிகளுக்கு நேரடியாக என்ன பயன்?
எழுதியவர்: Dheeraj Mishra தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் வருடாந்திர அனுமதி சீட்டானது, பல வழித்தட தடையில்லா சுங்கச்சாவடி அமைப்பின் செயல்பாட்டுக்கான விதிகளுக்கு இணங்குவதை அதிகப்படுத்தவும், மின்னணு அறிவிப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உதவும் என்று வெள்ளிக்கிழமை ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பயணிகளுக்கான சலுகை விலையிலான இந்த வருடாந்திர அனுமதி சீட்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இது வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுவரை, சுங்கச்சாவடிகளைச் சுற்றி வசிக்கும் மக்களுக்கு மாதாந…