Nakkheeran
ஊட்டியில் குடிநீர் அணைகளை தூர்வார கோரிக்கை!
ஊட்டி நகர்மன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் திமுக உறுப்பினர் ஜார்ஜ் தனது வார்டுக்கான கோரிக்கைகளை முன் வைத்தார். அதில், மார்லிமந்து, டைகர்ஹில் உள்ளிட்ட முக்கிய குடிநீர் அணைகளில் சேறும் சகதியும் தேங்கி உள்ளதால், மழைநீரை சேமிக்க முடியவில்லை. இதனை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் ஏடிசி, சாமுண்டி பகுதிகளில் கழிவுநீர் குழாய் உடைந்து சாலைகளில் ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், கோடப்பமந்து கால்வாயில்…