Indian Express Tamil
ரூ 4000 கோடியில் ரெடியான ராமாயணம்: படம் இவ்ளோ நீளமா? 'யு' சான்றிதழ் கிடைத்ததால் தயாரிப்பாளர் நிம்மதி
நடிகர் ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) U சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தில் எந்தவிதமான காட்சிகளும் நீக்கப்படாமல், ஒலி அல்லது காட்சித் திருத்தங்கள் எதுவும் கோரப்படாமல் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 3 மணி நேரம் 15 நிமிடங்கள் ரன்னிங் டைம்! ‘ராமாயணா’ திரைப்படத்தின் மொத்த நேரம் 195 நிமிடங்கள் எனத் தெரிவிக்க…