உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

சென்னையில் சாலையின் தரத்தைப் பராமரிக்க அறிவுறுத்தல்..!

சென்னை மாநகரில் மேற்கொள்ளப்படும் சாலைப் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகள் குறித்த புகைப்படங்கள், பொதுமக்கள் பார்வைக்காக பணிகள் நடைபெறும் இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. புதுப்பிக்கப்படும் சாலைகள் தரமாக உள்ளனவா என்பதை உறுதி செய்ய மாநகராட்சிப் பொறியாளர்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்த தார் அடுக்குகள் மூலம் சாலை மட்டம் உயர்வது தவிர்க்கப்பட வேண்டும், சாலையை புதுப்பிப்பதற்கு முன் தற்போதைய சாலையின் நிலை, மட்டம், வடிகால் உள்ளிட்டவை மதிப்பிடப்பட வேண்டும், பெயர்த்தெடுக்கப்படும் சாலைகள் ஏற்றம் இறக்கம் இல்லாமல் சீராக இருக்க வேண்டும்,…