Indian Express Tamil
மக்களிடம் கடும் கோபமும் வேதனையும் உள்ளது: பிரதமர், உள்துறை அமைச்சர், தேர்தல் ஆணையர் மீது ராகுல் காந்தி சாடல்
எழுதியவர்:Asad Rehman பாஜக தலைமையிலான மத்திய அரசையும் தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக விமரிசித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த வார இறுதியில் "இந்திய ஜனநாயகத்தை நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணைய தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் பாழாக்குவதற்கு" எதிராக 'இந்தியா' கூட்டணி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். மக்களிடையே மிகப்பெரிய கோபமும், மிகுந்த மன வேதனையும் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட ராகுல் காந்தி, ஞாயிற்றுக்கிழமை ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தவுள்ள பேரணியில் பொதுமக்கள் கலந்துகொள்வதைத் தடுக்க மத்திய உ…