IBC Tamil
2040இல் இலங்கையில் இலட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம்!
2040ஆம் ஆண்டளவில் இலங்கையில் சுமார் 1 இலட்சத்து 45 ஆயிரம் முழுநேர வேலைவாய்ப்புகள் இழக்கப்படக்கூடும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) தெரிவித்துள்ளது. உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பின் தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் எனவும் இதனால் ஆண்டுதோறும் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும் என்றும்அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு மேற்கொண்டுள்ள அண்மைய ஆய்வில், அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் ...