Nakkheeran
“கைதிகள் இங்கி பிங்கி பாங்கி போட்டு தப்பிக்கும் அளவுக்கு டம்மி முதல்வரின் ஆட்சி” - உதயநிதி கண்டனம்!
சென்னை புழல், தேனி சிறையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழிபறி உள்ளிட்ட வழக்குகளில் அன்னூர் காவல்துறையினர் ராகவன் என்பவரை கைது செய்து நேற்று கோவை மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிறை வளாகத்தில், அருகில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து ராகவன் தப்பியோடி இருட்டுப் பகுதிக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளார். தப்பியோடிய ராகவனை போலீசார் தொடர்ச்சியாக தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழக எதிர்க்கட்ச…