Daily Thanthi
சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
சென்னை, தமிழகத்தில் சமூக நீதி ஆய்வு நடத்த ஆணையம் அமைக்க அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பு இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வை நடத்துவதென்றும், இதற்காக ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய…