Nakkheeran
ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!
வீட்டில் ஓய்வு எடுத்து வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏவாக பதவி வகித்து வருகிறார். இவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், சென்னையில் உள்ள வீட்டில் இருந்தே மருத்துவ சிகிச்சைப் பெற்றும் ஓய்வும் எடுத்து வருகிறார். இந்த நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வரும் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதய…