Nakkheeran
கேரள ஜோதிட இரகசியங்கள்! (பாகம்-2) -லால்குடி கோபாலகிருஷ்ணன்(24) -லால்குடி கோபால கிருஷ்ணன்
அறிவைத் தரும், அனுபவமே வாழ்க்கையை தீர்மானிக்கிறது. துளையிடப்படாத மூங்கில் இசைப்பதில்லை, சுடப்படாத பொன் ஒளிர்வதில்லை. உளியின் வலியை உணராத கல் சிலையாவதில்லை. கேதுவும், சனிபகவானும், படிப்பினை தரும் அனுபவத்தால் முன்னேற்றத்தை உருவாக்குகிறார்கள். கசப்பான மருந்து நோயை குணமாக்குவதுபோல் துன்பியல் நிகழ்வுகளே வளமான எதிர்காலத்தைத் தருமென்பதே கிருஷ்ணன் நம்பூதிரியின் கருத்து. பிரசன்னம் பார்க்க வந்தவர் நடை தளர்ந்து முகம் சோர்ந்திருந்தார். தான் கடந்த ஏழு ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே சந்தித்து வருவதாகவும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழியைத் தேடியே, பிரசன்னம் பார்க்க வந்திருப்பதாகத் தெரிவித்தார். திரிச்சாம்பரம…