உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

போதையில் தடுமாறச் செய்யும் ராகு - முனைவர் ஆர். மகாலட்சுமி

உலகில் முதல் போதை தோன்றியது எங்கே தெரியுமா? பாற்கடலில்தான் தோன்றியது- ஆம். தேவர்களும், அசுரர்களும், பாற்கடலை கடைந்தபோது, நிறைய ஐஸ்வர்யங்கள் தோன்றின. முதலில் ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவன் தனது தொண்டையில் நிறுத்தி, நீலகண்டன் ஆனார். பின் காமதேனு, உச்சிரவஸ் எனும் குதிரை, ஐராவதம் எனும் வெள்ளை யானை, பாரிஜாதம் எனும் விருட்சம், அழகிய தேவ கன்னிகைகள், பின் கௌஸ்துபமணி எனும் இரத்தினம், மகாலட்சுமியும் தோன்றினாள். பின் தன்வந்திரி எனும் உத்தம புருஷர் தோன்றினார். பின் "வாருணி' எனும் தேவதை தோன்றினாள். மயக்கம் தரும் மதுவிற்கு அவள் தலைவியாய் இருந்தாள். அசுரர்கள் அவளை தங்களுக்கே வேண்டும் என உரிமை கொண்டாடினர்.…