உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

நடையை வைத்து ஒரு மனிதனின் குணத்தைக் கூற முடியுமா?

ஒரு மனிதன் எப்படி நடக்கிறான் என்பதைப் பார்த்தே அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் கூறிவிட முடியும். அவனின் நடையைப் பார்த்து, அவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதைக் கூறிவிட முடியும். ஒரு மனிதன் நடக்கும் விதத்தைக்கொண்டே அவன் எப்படிப்பட்ட மனநிலையில் அப்போது இருக்கிறான் என்பதை மிகவும் துல்லியமாக நாம் கணித்துவிட முடியும். அப்படிப்பட்ட சில நடைகளை நாம் இங்கு ஆராய்வோம். சிலர் நடக்கும்போது, ஸ்டைலாக நடப்பார்கள். நடைக்கு மத்தியில் ஸ்டைலாக நிற்பார்கள். அதிலிருந்து அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதை நாம் கூறிவிட முடியும். நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது மிகவும் தூரத்தில் வரும்போதே, அவர்கள் யார் என்ப…