Nakkheeran
தாய் சாபம் யாருக்கு பாதிக்காது! அகத்தியர் வாக்கு சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி ஜோதிடர்
"பாவங்கள் போமென்றீர் பாவமென்ன செய்தேன் பாவம் தீர யென் குருவே அருளிச் சொல்வீர்.' சுமார் 40 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து "என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்' என்றேன். நாடியில் பலன் தெரிந்துகொள்ள வந்தக் காரணத்தை கூறத் தொடங்கினார். "ஐயா, என் தந்தை என் திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டார். என் உடன்பிறந்த அண்ணன்கள் இரண்டு பேர். இருவரும் அரசு உத்தியோகத்தில் இருந்தார்கள். எங்களுக்கு சொத்துகள் ஓரளவு இருந்தது. தந்தை இறந்தபிறகு குடும்பம், விவசாயம், சொத்துகளைக் கவனித்து அதில் வரும் வருமானத்தில் செலவு போக மீதிப் பணத்தில் என் தாயின் பெயரில் இன்னும் சொத்துகளையும் வாங்கினேன்…