Nakkheeran
ஜோதிட சந்தேங்கங்கள்!
மணிகண்டன், சென்னை. திருமணம் எப்போது நடைபெறும்? 28-10-1993-ல் பிறந்தவர். மிதுன லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். ராசிக்கு 8-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷம். சூரியன் நீசபங்கம். சுக்கிரன் நீசபங்கம். ஒரே ராசியில் நான்கு கிரகங்கள். ஏழாம் அதிபதி 5-ல் மற்றும் செவ்வாய், சனி சம்பந்தம். இந்த ஜாதகப்படி, சந்திரன் கேமத்துருவ யோகத்தில் உள்ளார். எந்த விஷயமும் தடை, தாமதம், கஷ்டம் என இருக்கும். கிருஷ்ணருக்கு அவல் பாயசம் செய்து, ஏகாதசியில் வணங்கவும். நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி 2027 ஏப்ரல்வரை. அதன்பிறகு வரும் புதன் புக்தியில் திருமணம் நடக்கும். திருமணம் பேசி முடித்தபிறகு நின்று போன பெண்ணாக அமையும். இ…