Indian Express Tamil
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி; பூந்தமல்லி டு வடபழனி ரயில் சேவை வழக்கம் போல இயங்கும்: மெட்ரோ ரயில் நிர்வாகம்
சென்னை மெட்ரோ சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி இடையேயான மெட்ரோ சேவை நாளை முதல் இயங்காது என்ற தகவலுக்கு மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். போரூர் முதல் வடபழனி இடையே ரயிலை இயக்க பெறப்பட்ட தற்காலிக அனுமதி அடுத்த மாதம் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து நிரந்தர அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள். சென்னை பூந்தமல்லி முதல் வடபழனி இடையேயான மெட்ரோ சேவை கட்டுமானப் பணிகள் இன்னும் முடிக்கப்படாததால் நாளை முதல் சேவை இருக்காது என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கு மற…